அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலாந்துக்கு சென்று நோட்டா மற்றும் அமெரிக்க வீரர்களை சந்தித்து பேசியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று நோட்டா நாடான போலாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றுள்ளார். அங்கு அமெரிக்க மற்றும் நோட்டா படையில் உள்ள வீரர்கள், உக்ரைன் மந்திரிகள் மற்றும் அந்நாட்டில் இருந்து போலாந்தில் தஞ்சம் அடைந்த மக்களை சந்தித்து பேசினார்.
அப்போது ஜோ பைடன் பேசுகையில். “கடவுளின் பொருட்டு ரஷ்ய அதிபர் புதின் ஆட்சியில் தொடர கூடாது. உக்ரைன் மிதான ரஷ்ய போர் திட்டம் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. மேலும் புதின் ஒரு போர்க் குற்றவாளி, இரக்கமின்றி பலரை கொள்பவர், நோட்டா அமைப்பில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் அவரால் அது முடியவில்லை. ஏனென்றால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்