பூனை மற்றும் எலிகளை வைத்து பரிசோதனை நடத்தியதில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பு மருந்து பற்றிய தகவல்களை ஜார்ஜியா பல்கலைக்கழக பேராசிரியர் பகிர்ந்துள்ளார்.
உலக நாடுகள் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பல்வேறு விதமான மருத்துவ பயன்பாடுகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் கொரோனா தொற்றை குணப்படுத்தும் ‘ஸ்பிரே’ என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் செயல்பாடு குறித்து ஆய்வுகள் நடத்தியதில் வெளியான தகவல்களை ஜார்ஜியா பல்கலைக்கழகப் பேராசிரியரான பால் மெக்கிரே வெளியிட்டுள்ளார்.அவர் கூறியதாவது “இந்த தடுப்பு மருந்தை எலிகளுக்கு நாங்கள் பரிசோதித்தோம். அதில் எலிகளுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாகவும், ‘சார்ஸ்’ என்ற வைரஸ் கிருமியிலிருந்து இந்த மருந்தானது பாதுகாப்பு அளிக்கிறது.
மேலும் இந்த மருந்தை பூனைக்ககுட்டிகளுக்கு செலுத்தியதில் அவற்றிக்கு கொரோனா தொற்று வராமல் இருப்பதுடன் நோய் தோற்றிய பூனைக்குட்டி களிடலிருந்தும் மற்ற பூனைகளுக்கு கிருமி பரவாமல் தடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த ‘ஸ்பிரே’ மனிதர்களுக்கு பயன்படுத்த முடிந்தால் ஊசி செலுத்திக் கொள்ளதவர்களுக்கு வரபிரசாதமாக அமையும். மேலும் இந்த ஸ்பிரே 3 மாதங்களுக்கு குளிர் சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த முடியும் என்றும் முக்கு மற்றும் சுவாச குழாயில் உள்ள கிருமிகளை கொன்று நோய் பரவல் ஏற்படாமல் தடுக்கும்” என கூறியுள்ளார்.