ஜே.ஜோ உடற்பயிற்சிக் கூடத்தை பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு அருகில் ஜே.ஜோ என்ற உடற்பயிற்சிக்கான கூடம் அமைக்கப்பட்டு திறப்புவிழா சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மண்டைக்காடு சி.எஸ்.ஐ சபை போதகர் அருள் ஜெபசிங் கலந்துகொண்டு ஜெபம் செய்து நுழைவு வாசலை திறந்து வைத்துள்ளார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் போன்றோர் முன்னிலை வகித்தனர். அதன்பின் பாராளுமன்றம் உறுப்பினரான விஜய் வசந்த் இதில் கலந்துகொண்டு பயிற்சி கூடத்தை தொடங்கியதோடு அங்கு இருக்கும் கருவியினை இயக்கி பார்த்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு வசதிகளை நிர்வாகி சுஜி மேற்கொண்டார்.