Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இது தான் என் முதல் கடமை…. புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர்…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்….!!

புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் கடைசி குடிமகனுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைவதற்கு பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் சென்னை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இம்மாவட்டத்தில் புதிதாக கலெக்டர் பணிக்கு தெ. பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கலெக்டர் அலுவலகத்தில் தற்போது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதனால் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பின்னர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் செய்திக்குறிப்பில் கூறிய போது, அரசு அறிவிக்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்து மாவட்டத்தின் கடைசி குடிமகனுக்கு சென்றடைய பாடுபடுவதாகவும், தடுப்பூசி அளித்து மக்களை பாதுகாப்பது முதல் பணி எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |