Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதிதாக ஆலை திறப்பு…. பிரதமரின் நிவாரண நிதி…. கலெக்டரின் செயல்….!!

ஒரு கோடி மதிப்புடைய புதிதாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 1000 லிட்டர் திறன் கொண்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புடைய ஆக்சிஜன் உற்பத்தி ஆலை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நிறுவப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இவற்றில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜனை காற்றில் இருந்து  உற்பத்தி செய்யும் திறன் பெற்று இருக்கிறது. அதன்பின் இம்மாவட்டத்தில் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டு புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைத் திறந்து இயக்கி வைத்துள்ளார்.

பின்னர் இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 224 படுக்கைகளும் மற்றும் 350 ஆக்சிஜன் குழாய் இணைப்புகளும் உள்ளது. இதனை அடுத்து ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவம் மருத்துவ நிலையம் மூலமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரே நேரத்தில் 64 செயற்கை சுவாச கருவிகள் நிமிடத்திற்கு 15 லிட்டர் என்ற அளவில் ஆக்ஸிஜன் வழங்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது, தற்போது திறக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் எனவும், இதில் கூடுதலாக 200 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியும் எனவும், இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆக்சிஜன் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து 6 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவ இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |