9.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 214 மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலையை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோணாப்பட்டு ஊராட்சியில் 1.43 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 214 மீட்டர் தொலைவிற்கு ஏரி கால்வாய் தூர்வாரும் பணி, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் புத்தகரம் ஊராட்சியில் 2.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வீட்டின் கட்டுமான பணி ஆகியவை நடைபெற்று வருகின்றது.
இதனை அடுத்து கதிரமங்கலம் ஊராட்சியில் மகாத்ம காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழாக 9.40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 214 மீட்டர் தூரத்திற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இப்பணிகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மேலும் பச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் அவர்கள் சாப்பிட்டு அதை ஆய்வு செய்துள்ளனர்.