மலை மேல் இருக்கும் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டதால் ரோப்கார் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலுக்கு செல்லுவதற்கு 1,305 படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றது. இந்நிலையில் இந்த படிக்கட்டுகளின் வழியாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல முடியாத காரணத்தினால் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க 9.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரோப்கார் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து ரோப்கார் திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின் இத்திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டதால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பின்னர் 90 சதவீதம் பணிகள் தற்போது முடிவடைந்ததால் இறுதிகட்ட வேலையாக மலையின் கீழிருந்து மேலே செல்வதற்காக கொல்கத்தாவில் இருந்து 13 லட்ச ரூபாய் மதிப்புடைய 10 ரோப்கார்கள், அதன் துணை உபகரணங்களும் கோவிலுக்கு கொண்டு வந்ததை உதவி ஆணையர் ஜெயா பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வருடம் இறுதிக்குள் ரோப்கார்கள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.