ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிப்பது முறையற்றது என்றும் அது பலன் தராது என்றும் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஒமிக்ரான் வகையாக உருமாறிய நிலையில் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிப்பது முறையற்றது என்றும் அது பலன் கொடுக்காது என்றும் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் அந்தோனியா குட்டரஸ் பேசியபோது ” ஒமிக்ரான் பாதிப்பைக் குறைக்க பயணத்தை அனுமதித்து பொருளாதார இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இதர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் பயணங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான பரிசோதனை கருவிகள் நம்மிடம் இருக்கிறது என்பதால், அவற்றை பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார். இதனையடுத்து ஆப்பிரிக்க யூனியன் தலைவர் மற்றும் ஐ.நா.பொதுச்செயலாளர் இடையே நடைபெற்ற சந்திப்பை அடுத்து குட்டரஸ் விமானங்களுக்குத் தடை விதிப்பதை கண்டிப்பதாக” செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.