புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று தலீபான்களின் தகவல் மற்றும் கலாச்சார இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமல்ப்படுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் அங்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் மக்கள் அவர்களுக்கு பயந்து பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய கடவுச் சீட்டுகள் வழங்கப்படும் என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளும் கடவுச்சீட்டுக்களும் தற்காலிகமாக மட்டுமே செல்லும். இனி புதிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்ட பிறகு மக்கள் அதனை தான் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று தலீபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் படி ஆப்கானிஸ்தானில் அனைவருக்கும் புதிய கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் ஆப்கானிஸ்தானின் பெயர் “ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்” என்று மாற்றப்பட்டிருக்கும். இது குறித்தான தகவலை ஆப்கானிஸ்தான் தகவல் மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சரான ஜபியுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.