சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு ஆலோசகராகவோ பகுதி நேர பயிற்சியாளராகவோ அல்லது வழிகாட்டியாகவோ செயல்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார் .ஆனால் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து அவர் ஓய்வு பெற உள்ளார்.
மேலும் அவர் ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு ஆலோசகராகவோ , பகுதிநேர பயிற்சியாளராகவவோ அல்லது வழிகாட்டியாகவோ செயல்பட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் அவர் எந்த அணிக்கு ஆலோசகராக செய்யப்படுவார் என்பது குறித்த தகவல் தெரியவில்லை.