Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா…. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன….???

வடகிழக்கு பருவமழை 29ஆம் தேதி தொடங்கியது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதில், நவம்பர் 9ஆம் தேதி இலங்கையை ஒட்டியிருக்க தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது வருகின்ற 10, 11 ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை மற்றும் நகர்வு குறித்து தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏற்கனவே கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மிக கனமழை பெய்யுமோ, புயலாக மாறும் என்று மக்கள் மத்தியில் அச்சம் எழுந்து உள்ளது.

இதனையடுத்து இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை ஆலயம் தெரிவித்துள்ளது. இதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 30-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |