Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட….! இலங்கை வீரர்கள் மறுப்பு …!!!

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்த விதிமுறைகளுக்கு ,இலங்கை  கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்  .

சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம்,  24 வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தை அறிவித்திருந்தது. அந்தப் புதிய ஒப்பந்தத்தில் வீரர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் உடல் தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக விளையாடுவதற்கு 50 சதவீதமும் உடல் தகுதிக்கு 20 சதவீதமும் அத்துடன் அணியின் பங்களிப்பு, தலைமைப் பொறுப்பு, வருங்கால திறமை மற்றும் தொழில்முறை ஆகியவற்றிற்கு 10 சதவீதமும் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அந்த புதிய ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் புதிய ஒப்பந்த விதிமுறைகளுக்கு, இலங்கை வீரர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் புதிய ஒப்பந்தம் நியாய மற்றது என்றும், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த புதிய ஒப்பந்தத்தில் எங்களுக்கு கையெழுத்திட விருப்பமில்லை. வீரர்கள்  துப்பாக்கி முனையில் நிறுத்த வேண்டாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் ஒப்பந்த விதிமுறையின்படி ஒவ்வொரு வீரரும், எத்தனை புள்ளிகளை சேர்த்துள்ளனர், என்ற விவரத்தை அறிவிக்கவேண்டும் என்றும், மற்ற நாட்டு வீரர்களின் சம்பளத்தை விட, 3 மடங்கு குறைவாக தான் எங்களுக்கு சம்பளம் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் வருகின்ற 3ஆம் தேதிக்குள் அனைத்து வீரர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |