நடிகர் கமலஹாசன் தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்திற்காக வாழ்த்து தெரிவித்தது குறித்து பாரதிராஜா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடக்கவிருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகளால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின் கீழ் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் இணைந்து புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர். பாரதிராஜா இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். செயலாளராக டி. சிவா மற்றும் சத்யஜோதி தியாகராஜனும் பொருளாளராக செயல்பட உள்ளனர். இந்த சங்கம் குறித்த அறிவிப்புகள் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர்கள் தாணு, கே.ராஜன் , கமீலா நாசர், முரளி போன்ற பலர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பாரதிராஜா இந்த முடிவை கைவிட வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர். இதற்கிடையில் நடிகர் கமல் என்ற புதிய தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிராஜா கமலின் வாழ்க்கை குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில்” முடக்கத்தை உடைத்து முயற்சி எடுக்கையில் முன்னேறும் கமலஹாசனின் வழிமொழிதல் அகமகிழ்வை தருகிறது. மூத்ததொரு கலைஞனின்’ தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம்’ காலத்தின் தேவையென்ற புரிதல் போல தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்திற்காக நம் தொடக்கம், போராடி நிரூபிக்கும்.” என பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.