புதிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தொடங்கி இருப்பதாக இயக்குனர் திரு.பாரதிராஜா அறிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 1200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விரைவில் இந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய சங்கம் ஒன்று உருவாக உள்ளதாகவும் அந்த சங்கத்திற்கு திரு.பாரதிராஜா தலைவராக செயல்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாக இயக்குனர் திரு.பாரதிராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கைகள் இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது என்றும்.
தாய் சங்கத்தை உடைக்கவில்லை பிரித்தெடுக்கவும் இல்லை அவள் அப்படியே மெருகுற இருப்பாள் என்றும் ஒரு மடை அடைத்து கொண்டால் மற்றொரு மடையை திறப்பது போல தான் இந்த சங்கம் தொடங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எவ்வளவு தான் காத்து இருப்பது அதனால் தான் தமிழ் திரைப்பட நடிப்பு தயாரிப்பாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து நிர்வாகிகள் குழு அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த சங்கத்திற்கு இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை தொடங்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.