Categories
உலக செய்திகள்

நீங்கள் பத்திரிக்கையாளரா…? அப்போ இத கண்டிப்பா பாருங்க…. கூகுள் நிறுவனத்தின் புதுவித திட்டம்..

ஒரு புதுவித திட்டத்தை தொடங்குவதற்கு ஆர்வத்துடன் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கென்று ஒரு புதுவித திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய வணிக ரீதியிலான புதுவித சிந்தனைகளை செயல்படுத்துவதற்கு உதவும் விதமாக கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் என்னும் புதிய திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தில் பணியமர்த்தப்படும் பத்திரிகையாளர்களுக்கு தேவைப்படுகின்ற நிதியுதவி, பயிற்சி ஆதரவு போன்றவை வழங்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது அமெரிக்க நாட்டில் இந்த புதுவித திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பணிபுரிவதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்டு 1ஆம் தேதி கடைசி நாள் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |