லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய சேனல்களை ஒன்றிணைத்து புதிய தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
சன்சத் தொலைக்காட்சி என ஒன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி மக்களவை (லோக்சபா) மாநிலங்களவை( ராஜ்யசபா) தொலைக்காட்சிகளை ஒருங்கிணைத்து சன்சத் தொலைக்காட்சியாக தொடங்கப்படுகிறது. இந்தத் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலராக முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் ரவி காபூர் நியமிக்கப்படுகிறார்.
மேலும் இவர் 1 ஆண்டு காலம் பதவியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளன. லோக்சபா ராஜ்யசபா சேனல்கள் நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வந்த நிலையில் தற்போது ஒரு சேனலாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சன்சத் தொலைக்காட்சியை தொடங்கு நிர்வாக நோக்கங்களுடன் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர்களால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.