தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெதர்லாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.இதில் கடந்த 26-ம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இந்த தொடரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.