உருமாறிய கொரோனா வைரஸானது புதிய வகை மாறுபாடுகளை அடைந்தால் பாதிப்பு உருவாகும் என மருத்துவர் சாய்ரெட்டி தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் பெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH Zurich இன் பேராசிரியரும் நோயெதிர்ப்பு நிபுணருமான மருத்துவர் சாய்ரெட்டி கொரோனா வைரஸ் வகைகளில் ஒரு பகுதியான கோவிட்- 22 பற்றிய தகவலை நம்மிடம் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த கோவிட்- 22 வைரஸ் ஆனது மிகவும் ஆபத்தான மற்றும் புதிய கலவையாகும். இந்த வைரஸ் ஆனது புதிதாக மாறுபாடு அடைவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.
ஆகவே இனி நாம் தடுப்பூசிகளை மட்டும் நம்பி செயல்படக்கூடாது. மேலும் கோவிட்- 21 என்றழைக்கப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் ஆனது அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் பீட்டாவாகவும், பிரேசிலில் காமாகவும் உள்ள கொரோனா வைரஸானது புதிய மாறுபாடுகளை அடைந்தால் நாம் தொற்று நோயின் புதிய கட்டத்தைப் பற்றி பேச வேண்டிய சூழ்நிலை உருவாகும். இனி வரும் ஆண்டில் மிகப் பெரிய பாதிப்பாக உருவாகும்.
நாம் இப்போது இருக்கும் மோசமான நிலைமையை விட கடினமான சூழல் ஏற்படும். இதனால் தடுப்பூசி போடாத அனைவரும் SUPER- SPREADER ஆக மாறிவிடுவார்கள். அதிலும் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாததால் அவர்கள் அனைவரும் எளிதில் SUPER- SPREADER ஆக மாறலாம். இந்த மாறுபாடு அடைந்த வைரஸ் வகைகளை நாம் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியுடன் போராட வேண்டும். அதற்கு மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டரை செலுத்தி கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.