Categories
உலக செய்திகள்

புதிய வகை வைரஸ்…. பெரும் அழிவை ஏற்படுத்தாது…. இங்கிலாந்து விஞ்ஞானியின் கருத்து….!!

புதிய வகை கொரோனா வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தாது என்று இங்கிலாந்து விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய வகையான கொரோனா ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் அது பெரும் அழிவை ஏற்படுத்தாது என இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறியுள்ளார். இதுகுறித்து காலம் செம்பிள் கூறியபோது “இது பெரும் அழிவை ஏற்படுத்தாது. இதனிடையில் எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் நிலைமையே மிகைப்படுத்தி இருப்பதாகவே நான் கருதுகிறேன். மேலும் தடுப்பூசியால் கிடைக்கிற எதிர்ப்பு சக்தி இன்னும் கடுமையான நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும். அதுமட்டுமின்றி ஜலதோஷம், தலைவலி ஏற்படும்போது மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருதல் அல்லது இறக்கிற வாய்ப்பு தடுப்பூசியால் வெகுவாக குறைந்து விட்டது” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |