Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

புதிய வழித்தடத்தில்… நகர பேருந்துகள்…. தொடங்கி வைத்த கலெக்டர், எம்.எல்.ஏ….!!

பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் நகர பேருந்துகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் செல்வதற்கு இலவசம் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடங்கள் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய வசதியாக புறநகர் பேருந்துகளை நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்து இயங்கியது. இதனையடுத்து நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. போன்றோர் கொடி அசைத்து பேருந்துகளை தொடங்கி வைத்தனர். இதில் புதிய வழித்தடமாக திருவாரூர் -அடவங்குடி, திருவாரூர்- நீடாமங்கலம் ஆகிய 2 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனையடுத்து புறநகர் பேருந்துகளை நகர பேருந்துகள் ஆக மாற்றப்பட்டு திருவாரூர்-கோட்டூர், திருவாரூர்-நாகலூர், திருவாரூர்- நாகப்பட்டினம், திருவாரூர்- திட்டச்சேரி, திருவாரூர்- மோகனூர் போன்ற 5 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு இயக்கப்பட்டது. மேலும் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நகரப் பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதில் அரசு போக்குவரத்து கழக நாகை மண்டல பொது மேலாளர் மகேந்திரகுமார், ஒன்றியக்குழு தலைவர் தேவா, துணை மேலாளர்(தொழிநுட்பம்) சிதம்பரகுமார், துணை மேலாளர் (வணிகம்) ராஜா, உதவி கலெக்டர் கீதா, நகராட்சி ஆணையர் பிரபாகரன், தாசில்தார் நக்கீரன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Categories

Tech |