புதிதாக கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா திறக்கப்பட உள்ளதாக மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அலுவலகம் வாணியம்பாடிய பகுதியில் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அலுவலகம் கட்டுகின்ற பணியை மாநில தலைவர் அண்ணாமலை திடீரென ஆய்வு செய்துள்ளார்.
இதில் முன்னதாகவே வருகை தந்த மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாஜக சார்பாக பைபாஸ் ரோட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆய்வு மேற்கொள்ள வந்தவரிடம் கட்சியினர் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்து கட்சி அலுவலக கட்டிடம் கட்டுமான பணிகள் முடிந்ததும் கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் விரைவாக திறப்பு விழா நடத்தப்பட இருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.