Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“காவல்துறை உங்கள் நண்பன்” பேருந்து நிறுத்தத்தில் கொண்டாட்டம்…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….!!

காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் இணைந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காவல் நிலையம் சார்பாக பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரின் நண்பர் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் அனைத்து காவல்துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து ஆங்கில புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். இதில் துணை காவல்துறை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கி கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

இந்நிலையில் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்களுக்கு அவர்கள் கேக் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் காவல்துறை இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்களும் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

Categories

Tech |