Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டை கொண்டாட கடும் கட்டுப்பாடு… மீறினால் அதிரடி நடவடிக்கை…!!!

தமிழக மக்கள் புத்தாண்டை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் சிறுவர் பூங்கா ஒன்று 7லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்து வைத்தார். அங்கு அவர் ஒரு மரக்கன்றை நட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு போலீசாருக்கும், போலீசாரின் குடும்பத்தினருக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த நலத்திட்டங்களை செயல்படுத்த சென்னையில் 12 துணை கமிஷனர் சங்கங்களிலும் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் 12 நோடல்  அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நலத்திட்டங்கள் அவர்களின் மூலமாக செயல்படுத்தப்படும்.

கடற்கரை பகுதி, சாலைகள் மற்றும் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. பொதுமக்கள் புத்தாண்டை தங்களது வீடுகளில் தான் கொண்டாட வேண்டும். பொது மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தடுப்பதற்கு சாலைகளில் 300 இடங்களில் சோதனை சாவடிகளை அமைத்து வாகன சோதனை நடத்த உள்ளோம்.

Categories

Tech |