பூமியிலிருந்து 90 ஒளியாண்டுகள் தொலைவில் பார்ப்பதற்கு நெப்டியூனை போல் மிகவும் குளிர்ச்சி வாய்ந்த புதுவித கோளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவிலிருக்கும் விண்வெளி மையமான நாசாவின் விஞ்ஞானிகள் பூமியிலிருந்து சுமார் 90 ஒளியாண்டுகள் தொலைவில் பார்ப்பதற்கு நெப்ட்யூன் போலிருக்கும் TOI-1231 b என்னும் புதுவித கொளை கண்டுபிடித்துள்ளனர். இந்த கோளானது அளவில் பூமியைவிட 3 1/2 மடங்கு பெரியதாக உள்ளது என்று நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்தக் கோளில் பூமியில் நிலவும் சீதோஷண நிலை நிலவுவதற்கு வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த புதுவித கோளில் நீர் இருக்க வாய்பிருப்பதால் அதிக குளிர்ச்சி தன்மையை கொண்டதாகயிருக்கும் என்று கூறியுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து இனி வரும் காலங்களில் இந்தக் கோள் குறித்த பல ஆய்வுகளை நாசா விண்வெளி மையம் செய்யவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.