பிரித்தானியர் வாங்கிய வீட்டில் பொம்மையும் அதனுடன் கடிதமும் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Walton என்ற இடத்தில் கட்டப்பட்ட ஒரு வீட்டை கடந்த வெள்ளிக்கிழமை அன்று Jonathan Lewis என்பவர் வாங்கியுள்ளார். இதனையடுத்து வாங்கிய புது வீட்டில் அவர் நுழைந்தவுடன் ஒரு மூலையில் இருந்து ஒயர் வெளிவருவதை கண்டுள்ளார். இதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அந்த ஒயர் ஆனது ஒரு துவாரத்தின் வழியாக வந்தவுடன் உடனடியாக சுவரை தட்டியுள்ளார். குறிப்பாக சுவர் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் கட்டப்பட்ட போலிச்சுவர் ஆகும். அதனால் சுவரானது உடைந்தது.
மேலும் உடைந்த சுவரின் உள்ளே பார்த்த பொழுது ஒரு பொம்மையும் அதனுடன் கடிதம் ஒன்று இருந்துள்ளது. உடனே அந்த பொம்மையை எடுத்து அந்த கடிதத்தை பிரித்து படித்துள்ளார். அந்த கடிதத்தில் “இந்த வீட்டை புதிதாக வாங்கி என்னை விடுதலை செய்ததற்கு நன்றி. எனது பெயர் எமிலி. கடந்த 1961 ஆம் ஆண்டு என்னுடைய உரிமையாளர்கள் இந்த வீட்டில் வசித்தனர். எனக்கு அவர்கள் பாடிக்கொண்டே இருந்தது பிடிக்காமல் அனைவரையும் கத்தியால் குத்தி கொன்றுவிட்டேன். உங்கள் வீட்டிலும் கத்தி இருக்கும்.
நீங்களும் நன்றாக உறங்குவீர்கள் என்று நினைக்கிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது. ஒருவேளை வேறு யாராவது இந்த கடிதத்தை படித்து இருந்தால் உடனே வீட்டை விட்டு வெளியேறி இருப்பார்கள். மேலும் இந்த விஷயம் தெரிந்த அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூட உடனடியாக வீட்டை விட்டு காலி செய்யும்படி கூறியுள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் எனக்கு பார்க்க வேடிக்கையாக உள்ளது என்று Lewis கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதில் ” இந்த வீட்டிலுள்ள சமையலறையை கட்டியே 5 ஆண்டுகள் தான் ஆகிறது. இந்த காகிதமும் புதிதாக உள்ளது. ஆகவே இதை யாரோ அண்மையில் தான் எழுதியுள்ளனர். ஆகவே நான் இந்த வீட்டை விற்கமாட்டேன்” என்று கூறியுள்ளார்.