Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் கொடூரம் …..கூலி தொழிலாளி வெறிச்செயல் !!!!!….

புதுவையில் கூலித்தொழிலாளி, இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி,  குமரகுருபள்ளத்தை சேர்ந்த 35 வயதான  கீதா, தனது  2 குழந்தைகளுடன்   கணவனை பிரிந்து, கீதா சாரம் ஜெயராம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவருக்கும் தட்டுவண்டி தொழிலாளியான ஆனந்த் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டுள்ளது .திருமணமான ஆனந்த் அவ்வப்போது கீதாவின் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று இருவருக்கும்  இடையே தகராறு ஏற்பட்ட நிலையில்  ஆத்திரமடைந்த ஆனந்த் கீதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதை தாங்க முடியாத  கீதா அலறியடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த நிலையிலும்,  அவரை விடாமல் துரத்தி ஆனந்த் கத்தியால்  கீதாவை  குத்தியுள்ளார்.இதில் கழுத்து, நெஞ்சு பகுதிகளில் பலத்த காயம் பட்ட  கீதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் . இதைஅடுத்து  ஆனந்த் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். lady dead body க்கான பட முடிவு

கோரிமேடு போலீசார், இதுகுறித்துகொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . கொலையான கீதாவின் உடல்  பிரேத பரிசோதனைக்கு  கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது ஆனந்த் போலீசில்  சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Categories

Tech |