புதுச்சேரியில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தனியார் பேருந்துகளின் சங்கத்தின் தலைவர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.
பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ளூர் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேசமயம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாத காலமாக பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் வருவாய் குறைந்து உள்ளதால் சாலை வரியை நீக்க வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை அடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உடன் புதுச்சேரி அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முடிவில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதாக அச்சங்கத்தின் தலைவர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.