புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 559 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் திங்கட்கிழமை கூடும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.