புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மட்டும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் செல்வம், இணை செயலாளர் பத்மா மாவட்ட செயலாளர் பச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர் ஆக்கி குறைந்தபட்ச ஊதியம் இருபத்தி நான்காயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9000 ரூபாய் வழங்க வேண்டும். உதவியாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.