திருமணமான 8 மாதங்களில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருநின்றவூர் பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்திக்கு கல்பனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த கல்பனா அதே பகுதியில் இருக்கும் தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.