Categories
சினிமா தமிழ் சினிமா

புது மைல் கல்லை எட்டும் “வாரிசு” படத்தின் ரஞ்சிதமே பாடல்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்….!!!!

பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” என்ற திரைப்படத்தில் விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். இத்திரைப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அண்மையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “ரஞ்சிதமே” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய், மானசி இணைந்து பாடிய இந்த பாடல் இதுவரை யூடியூப்பில் 9 கோடி (90 மில்லியன்) பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதேபோல் சிம்பு குரலில் வெளியாகிய  “தீ தளபதி” பாடல் யூடியூபில் 2 கோடி (20 மில்லியன்) பார்வையாளர்களை கடந்து உள்ளது. இதை இசையமைப்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து “தீ” எமோஜியை பதிவிட்டு உள்ளார்.

Categories

Tech |