Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புதுமனை புகுவிழாவிற்கு சென்ற போது… பெயிண்டருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

2 மோட்டார் சைக்கிளும் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் பெயிண்டர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கன்னிவிளை பகுதியில் பெயிண்டரான கல்யாண ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கல்யாண ராஜ் தனது உறவினர் ஒருவரின் வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு திரும்ப மோட்டார் சைக்கிளில் ஏரல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காராவிளை பகுதியில் வசிக்கும் குமரேசன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று திடீரென கல்யாண ராஜின் மீது மோதி விட்டார். இந்த விபத்தில் கல்யாண ராஜ் மற்றும் குமரேசன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் இரண்டு பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கல்யாண ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். அங்கு குமரேசனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கல்யாண ராஜியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |