வன விலங்கு காப்பகத்தில் சைபீரிய இன புலி 2 குட்டிகளை ஈன்றுள்ளது.
போலந்து நாட்டில் ப்ளாக் நகரில் வன விலங்கு காப்பகம் ஒன்று உள்ளது .இந்த வன விலங்கு காப்பகத்தில் இருக்கும் சைபீரிய இன புலி ஒன்று 2 குட்டிகளை ஈன்றுள்ளது . இந்த புதிய புலிக் குட்டிகளின் பிறப்பால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் , அத்துடன் குறைந்து வரும் இந்த சைபீரிய இன புலிகளின் எண்ணிக்கை இனிவரும் காலத்தில் பெருகும் என்று நம்பிக்கை வைத்துள்ளதாகவும் வன விலங்கு காப்பக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.