புதுச்சேரியில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு பல பகுதிகளில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மக்கள் அரசின் உத்தரவை கடைபிடிக்க மறுக்கிறீர்கள். அலட்சியம் காட்டுகிறீர்கள்.
இதனால் விரைவில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். முன்பை காட்டிலும் அலட்சியத்தால், தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கு போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஆகஸ்ட் 12ம் தேதி பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.