புதுச்சேரியில் கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழுப்புரம், புதுச்சேரி சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூலக்குளம் அருகே சோதனை சாவடியை கடந்து செல்ல முயன்ற காவலர் அரவிந்த்ராஜை ஊர் காவல் படை வீரர் அசோக் தடுத்து நிறுத்தியிருக்கிறார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. அசோக் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவுகளின் கீழ் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காவலர் அரவிந்த்ராஜ் கைது செய்துள்ளனர். பாதுகாப்பு பணியில் இருந்த ஊர் காவல் படை வீரர் மற்றும் காவலர் மோதிக்கொண்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.