ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான செர்ஜெய் ஷிகோவிடம் அதிபர் புடின் உக்ரைன் நாட்டின் முக்கிய நபர்களை ஏன் ஆக்கிரமிக்க முடியவில்லை? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர்தொடுக்க தொடங்கியது. அந்நாட்டின் பல முக்கிய நகர்களில் தாக்குதல் மேற்கொண்டு நிலைகுலையச் செய்திருக்கிறது. எனினும், உக்ரைனின் பெரிய நகர்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. எனவே, ரஷ்யா இந்தப் போரில் ஏறக்குறைய முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று உலக நாடுகள் கூறியுள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் செர்ஜெய் ஷிகோ, கடந்த ஒரு மாதமாக வெளியில் காணப்படவில்லை. பொது இடங்களில் தலைகாட்டாமல் இருக்கிறார். இவருக்கு சமீபத்தில் கடும் மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக அதிபர் புடின் இவர் மீது கடும் கோபமடைந்ததாகவும் போரில் பின்னடைவை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டின் பெரிய நகர்களை எதனால் ஆக்கிரமிக்க முடியவில்லை? என்று கோபத்துடன் செர்ஜெய் ஷிகோவிடம் கேள்வி எழுப்பினார் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் போருக்காக ஒதுக்கப்பட்ட நிதி ஜெனரல்கள் பலரால் திருடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே அவர்கள் மீது அதிபர் புடின் கோபத்தில் இருந்த சமயத்தில் தான் செர்ஜெய் ஷிகோவிற்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது.