Categories
உலக செய்திகள்

“அவங்க பயங்கரமான ரவுடிகள்!”…. உக்ரைன் மக்களை பற்றி பேசிய புடின்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மக்கள் பயங்கர ரவுடிகள் என்று தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அதற்கு, உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே, உலக நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

எனினும், ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து பல நகரங்களை கைப்பற்றி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் மக்களிடையே  உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, உக்ரைன் மக்கள், பயங்கர ரவுடிகள்.

அந்நாட்டு இராணுவம், அப்பாவி பொதுமக்களை மனித கேடயங்களாக மாற்றியிருக்கிறது. எனினும், அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக ரஷ்யப் படைகள் மோதிக் கொண்டிருக்கின்றன.

சிறப்பு ராணுவ நடவடிக்கை திட்டமிட்டவாறு நடந்து கொண்டிருக்கிறது. இந்த தாக்குதல் கிழக்கு டான்பாஸ் நகரத்தை பாதுகாப்பதற்காகத் தான் நடக்கிறது. இந்த தாக்குதலில் மூத்த தளபதி உட்பட நம் படையை சேர்ந்த சிலர் பலியாகியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |