அமெரிக்க அரசு, ரஷ்ய ராணுவம், அதிபர் விளாடிமிர் புடினை தவறாக வழிநடத்துகிறது என்று கூறியுள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தியாளர் செயலாளரான கேட் பெடிங் பீல்ட் கூறியிருப்பதாவது, “நான் என்ன சொல்வது, கண்டிப்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு ராணுவத்தினரால் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது என்றார்.
மேலும், இந்த தகவலானது, அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அவரின் ராணுவத் தலைமைக்கும் இடையே தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறியிருக்கிறார் .