ரஷ்ய அதிபர், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முக்கியமான நகரங்களை ஆக்கிரமிக்க வைத்திருந்த காலக்கெடுவை அடுத்த மாதம் நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டிற்கு எதிரான ரஷ்யப்போர் ஏழு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் Donetsk என்னும் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
ரஷ்ய படையினர் Luhansk பிராந்தியத்தை கைப்பற்றினாலும், டொனெட்ஸ்க் பகுதியை மொத்தமாக கைப்பற்றுவதில் தொடர்ந்து மோதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபரின் திட்டத்தின் படி, கிழக்கு பகுதியை சேர்ந்த முக்கியமான நகரங்களை கைப்பற்ற வைத்த காலக்கெடுவை செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக உக்ரைன் நாட்டை சேர்ந்த அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.