Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் தலைமறைவான புடினின் காதலி… நாடு கடத்துமாறு கோரிக்கை வைத்த மக்கள்…!!!

சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ரகசிய காதலியை வெளியேற்றுமாறு 63 ஆயிரம் மக்கள் கையெழுத்திட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அலினா கபேவா என்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மனைவி என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. எனினும், இது தொடர்பாக தற்போது வரை அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்குவதற்கு முன்பாக தன் காதலியை சுவிட்சர்லாந்திற்கு புடின் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக, பெலாரஸ், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலர் அலினாவை சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று ஸ்விஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், அவரை ரஷ்ய நாட்டிற்கு நாடு கடத்துமாறும் கூறியிருந்தார்கள். இதற்கான ஒரு மனுவில் 63 ஆயிரம் மக்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |