ரஷ்ய அதிபர் புடினின் காதலி, சுவிட்சர்லாந்து அல்லது சைபீரிய மறைவு குழியில் பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என்று கூறப்படும், Alina Kabaeva நான்கு குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்பட்டது. இவர் உக்ரைன் நாட்டில் ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கிய பின் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாஸ்கோவில் இருக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சித் திடலில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன்பாக சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரிகள் அந்நாட்டிலிருந்து அவரை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் ரஷ்ய நாட்டிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில், தற்போது அவர் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.