Categories
உலக செய்திகள்

பாதியில் நிறுத்தப்பட்ட புடின் பேச்சு…. தொலைக்காட்சி நிகழ்ச்சியால் பரபரப்பு…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்த நிகழ்ச்சியை, ஒரு தொலைக்காட்சி திடீரென்று பாதியில் நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 24ஆம் நாளாக தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யாவின் அதிபரான விளாடிமிர் புடின், நாட்டு மக்களின் முன்னிலையில் உரையாற்றுவதற்காக மாஸ்கோவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிந்தனர்.

லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் முன்னிலையில் அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை ரஷ்யாவின் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தது. அப்போது அவரின் பேச்சு திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டு, நாட்டுப்பற்று இசை ஒலித்தது.

வழக்கமாக ரஷ்யாவின் தொலைக்காட்சி நிறுவனங்கள் மிகுந்த தீவிரமாக செயல்படும். இவ்வாறான இடையூறுகள் அரிதாகத்தான் ஏற்படும். எனினும் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு 10 நிமிடங்களில் அதிபரின் பேச்சு முழுமையாக ஒளிபரப்பப்பட்டது.

Categories

Tech |