Categories
பல்சுவை

புற்றுநோய் பாதித்த சஞ்சய் தத்… குணமடைய வாழ்த்து கூறிய யுவராஜ் சிங்…!!!

சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யுவராஜ் சிங் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனது டுவிட்டர் பதிவில், “மருத்துவ சிகிச்சை பெற இருப்பதால் வேலையில் இருந்து சற்று ஓய்வு எடுத்து கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீங்கள் எப்போதுமே ஒரு போராளி. உங்களின் வலியை நான் அறிவேன். இருந்தாலும் நீங்கள் மிகவும் வலிமையானவர். மேலும் இந்த கடினமான கட்டத்தை நீங்கள் கடப்பதை நான் பார்ப்பேன். நீங்கள் விரைவாக குணமடைவதற்கு நான் கடவுளை பிரார்த்தனை செய்கிறேன் மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டு 2013ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |