புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கோபால்ட் எந்திரத்தின் மூலமாக கதிர்வீச்சு செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் புற்றுநோயால் உருவாகும் செல்களும் திசுக்களும் அழிந்து பாதிக்கப்பட்டவர் நோயிலிருந்து விடுபடலாம். கோபால்ட் எந்திரத்தின் மூலமாக சிகிச்சை அளிக்கும்போது அதற்கான பராமரிப்புச் செலவுகள் மிகவும் குறைவு. அதே நேரத்தில் அந்த எந்திரத்தின் ஆயுள்காலம் அதிகம் என்பதால் ஏராளமான அரசு மருத்துவமனைகளில் கோபால்ட் சிகிச்சையே பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கேன்சர் செல்களை அழிக்க கீமொதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை முறை இனி தேவைப்படாது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளனர். அதற்கு பதிலாக மாற்று சிகிச்சை முறையை கண்டறிந்து இருப்பதாகவும், மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்து விரைவில் அறிக்கை வெளியிட இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.