பூட்டியிருந்த வீட்டில் சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மையப்பன் நகர் ஊராட்சிக்குட்பட்ட பூக்காரன் வட்டம் பகுதியில் கலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கலா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அவரது பேரன் கோகுல் பாட்டி இல்லாத காரணத்தால் தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது கலா வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் சுவர் இடிந்து தரைமட்டமானது.
இதனையடுத்து வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்து கருகி சேதமடைந்துள்ளது. இது பற்றி அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அமைத்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்தது வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.