புயல் காரணமாக விமான போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த வாரம் டல்லாஸ் பகுதியில் கடுமையான புயல் வீசியது. இதனால் பணியாளர்கள் வேலைக்கு செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. மேலும் கடந்த வியாழக்கிழமை முதல் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் “அமெரிக்கா ஏர்லைன்ஸ் கடந்த வெள்ளி மற்றும் சனிக் கிழமைகளில் சுமார் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.
இதனை தொடர்ந்து நேற்றும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் அதனை கண்காணிக்கும் வலைதளமான பிளைட் அவேர் தெரிவித்துள்ளது. குறிப்பாக வருகின்ற நவம்பரில் இருந்து விமான சேவைகள் சீராக தொடங்கும் என்று அமெரிக்க ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குனர் டேவிட் சேமோர் கூறியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் 2000 விமானங்களை ரத்து செய்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு 75 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.