அமெரிக்காவில் புயல் தாக்கியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஐடா புயல் தாக்கியது. இதனால் அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த புயலுக்கு 63 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக 6 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புயலினால் 4 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு பேர் கல்லூரி மாணவர்கள் என்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து காணாமல்போன Nidi Rana என்ற இளம் பெண்ணும் அவரது நண்பரான Ayush Ranaவும் காரில் சென்ற பொழுது பெரு வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டனர்.இவர்களின் பெயர்கள் ஒன்றாக இருப்பினும் அவர்கள் உறவினர்கள் இல்லை. ஏனெனில் அவர்களின் குடும்பத்தார்கள் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். மேலும் இவர்களை பல படகுகளில் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரின் புகைப்படங்களும் பல இடங்களில் போஸ்டராக ஒட்டப்பட்டுள்ளது. இவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளைக் காணாமல் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். இதற்கிடையில் அவர்களின் கல்லூரி முதல்வர் “இருவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்” என்று பிரார்த்திக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.