பி.வி.சிந்துவின் வெற்றி உத்வேகம் அளிக்கும் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து_க்கு முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து வீராங்கனை பி.வி சிந்து_க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் பி.வி சிந்து_க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் விளையாட்டில் இளம்தலைமுறையினர் சிறந்து விளங்க பி.வி.சிந்துவின் வெற்றி உத்வேகம் அளிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
Heartiest congratulations to @Pvsindhu1 on her maiden Gold at the BWF World Championships.
I wish her many more victories in years to come.
May her success be an inspiration for young Indians to excel in sports.#PVSindhu
— M.K.Stalin (@mkstalin) August 25, 2019