Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

புதிய அறிவிப்பு…. இண்டர்நெட் மூலம் வேலை…. தமிழக முதல்வர் அறிவிப்பு…!!

தனியார் நிறுவனங்களில் இன்டர்நெட் மூலம் வீட்டில் இருந்தபடி வேலை வாய்ப்பை அளிக்கும் இணையதளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போதைக்கு அரசுத் தேர்வுகள் நடைபெறக் கூடிய சூழல் இல்லாததால், அனைவரும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமென்ற மனநிலைக்கு வந்து விட்டனர். இந்த கொரோனா சூழ்நிலையில் கம்பெனி கம்பெனியாக ஏறிச் சென்று வேலை வாய்ப்பை பெற முடியாத சூழ்நிலை.

ஆகவே, இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனியார் துறையில் வேலை வாய்ப்பை பெறும் விதமாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இளைஞர்கள் சுலபமாக வேலையை பெற்றுக்கொள்வதற்கான இணையதளத்தை தொடங்கி வைத்துள்ளார். மேலும் தனியார் நிறுவனங்களும் இந்த இணையதளத்தில் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை தெரிவித்து அதில் விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |