Q-NET நிறுவனம் 5000 கோடி நிறுவனம் மோசடி செய்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
Q-NET என்ற நிறுவனம் 5000 கோடி மோசடி செய்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக கூறி வழக்கு பதியப்பட்டதை தொடர்ந்து, 70 பேரை ஹைதராபாத் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் Q-NET திட்டங்களில் சேர வேண்டாம் என்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஊடகங்களில் முன்னணி நடிகர்களை கொண்டு விளம்பரம் செய்து பர்சனல் ஹெல்த், உணவுப்பொருட்கள் மற்றும் சுற்றுலா பொருள்கள் போன்ற பல்வேறு பொருள்களை வைத்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் திட்டங்களை அரசியல் தலைவர்களின் துணையோடு விநியோகித்து வந்தனர். அந்தவகையில் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற 5 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்பட்டத்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் விஜய், ஈஸ்வரன் ஜோசப் ஆகியோர் ஹாங்காங்கில் தலைமறைவானதாக சொல்லப்படும் நிலையில், இந்த முறைகேடு குறித்து இந்திய அரசு பெருநிறுவன விவகாரங்களில் கீழ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விளம்பரங்களில் நடித்த நடிகர் ஷாருக்கான், அணில் கபூர் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிக்கலாம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.